பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதம் வருகை

ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனத்துடன் கூடிய பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியாவிடம் போயிங் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக மிக முக்கிய பிரமுகர்கள், ஏர் இந்தியாவின் பி747 ரக விமானங்களில் பயணிக்கிறார்கள். ‘ஏர் இந்தியா ஒன்‘ என்று அழைக்கப்படும் இந்த விமானங்களை ஏர் இந்தியா விமானிகள் இயக்குகிறார்கள். மிக முக்கிய பிரமுகர்கள் பயணிக்காதபோது, இவ்விமானங்கள், ஏர் இந்தியா வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்கான பி777 ரகத்தை சேர்ந்த 2 விசேஷ விமானங்களை ‘போயிங்‘ நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்த விமானங்கள், ஜூலை மாதம் ஏர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com