கோழிக்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 17 பயணிகள் இருந்தனர்.
தரையிறக்கப்பட்ட விமானம்
தரையிறக்கப்பட்ட விமானம்
Published on

கோழிக்கோடு:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை குவைத்துக்கு எர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் சரக்கு பெட்டக பகுதியில் தீப்பிடித்ததை குறிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனையடுத்து விமானிகள் விமானத்தை கோழிக்கோட்டுக்கு திருப்பினர். 

கோழிக்கோடு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும், விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com