விமானப்படை தளபதியாக பதவியேற்ற பின்னர் பதாரியா முதல் முறையாக காஷ்மீர் பயணம்

புதிதாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்.
விமானப்படை தளபதி பதாரியா
விமானப்படை தளபதி பதாரியா
Published on

ஸ்ரீநகர்:

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து  ஆர்.கே.எஸ்.பதாரியாவை புதிய தளபதியாக மத்திய அரசு அறிவித்தது.

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதவி ஏற்ற பின்னர் பதாரியா இன்று காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின்போது ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தை பார்வையிட்ட பதாரியா பாதுகாப்பு நிலைமை மற்றும் விமானப்படையின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார்.  

விமானப்படை தளபதியாக பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக பதாரியா காஷ்மீருக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com