இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று தீர்மானித்துள்ளது.
சர்ச்சைக்குள்ளான அயோத்தி நிலம்
சர்ச்சைக்குள்ளான அயோத்தி நிலம்
Published on

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பாகவும் அரசிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை அயோத்திக்குட்பட்ட பகுதியில் பெறுவது தொடர்பாகவும் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.

சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com