டிப்ளமோ படிப்புக்கு இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை- ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

எம்.பி.ஏ., முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளுக்கு இந்தாண்டு மட்டும் இளநிலை பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடத்தலாம் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு (கேட்), மேலாண்மை தகுதித்தேர்வு (மேட்), பொது மேலாண்மை நுழைவுத்தேர்வு (சிமேட்) உள்ளிட்ட பல்வேறு பொது நுழைவுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

அந்த தேர்வுகள் அடிப்படையில் தான் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம் நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக, மேற்சொன்ன நுழைவுத்தேர்வுகள் நடத்துவதிலும் மற்றும் ரத்து செய்வதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

இதனை கருத்தில் கொண்டு எம்.பி.ஏ., முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளுக்கு இந்தாண்டு மட்டும் இளநிலை பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடத்தலாம். மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com