நன்னிலத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார்.
நன்னிலத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
Published on

நன்னிலம்:

நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். நாகை கே.கோபால் எம்.பி., தலைமை பேச்சாளர் அறந்தை செல்வம் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். என்னை எம்.எல்.ஏ.வாக உருவாக்கிய உங்களை மறக்கமாட்டேன். நீங்கள் என்றும் அ,தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சந்திரன், வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com