அம்மாவை நினைத்து பாராளுமன்றத்தில் கண்ணீர் வடித்த அ.தி.மு.க., எம்.பி.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த வாய்ப்பை தனக்கு அளித்த ஜெயலலிதாவை நினைத்து அ.தி.மு.க., எம்.பி. மைத்ரேயன் கண்ணீர் விட்டு அழுதார்.
கண்ணீரை துடைக்கும் மைத்ரேயன்
கண்ணீரை துடைக்கும் மைத்ரேயன்
Published on

பாராளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5  மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இவர்களுக்கு இன்று பிரிவு உபச்சாரம் தெரிவிக்கும் வகையில் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பேசினர்,

இந்நிலையில், தனது எம்.பி. பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று தனக்கு இந்த வாய்ப்பை முன்னர் அளித்த தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவை நினைத்து அ.தி.மு.க., எம்.பி. மைத்ரேயன் கண்ணீர் விட்டு அழுதார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com