டெல்லியில் ஜனாதிபதியுடன் தம்பிதுரை சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை மு.தம்பிதுரை திடீரென தனியாக சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
டெல்லியில் ஜனாதிபதியுடன் தம்பிதுரை சந்திப்பு
Published on

புதுடெல்லி:

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜீவ் மெஹ்ரிஷி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரையும் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை மு.தம்பிதுரை திடீரென தனியாக சந்தித்து சிறிது நேரம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com