

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க.வின் நீண்டகால தோழமை கட்சியான சிவசேனா உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகளும், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களில் வேலை பார்க்கும் 21 ஆயிரத்து 137 ஊழியர்களில், 8 ஆயிரம் பேர் ஏர் கார்பரேஷன் யூனியனில் உள்ளனர். மற்ற ஊழியர்கள் வேறு சில சங்கங்களில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக ஏர் கார்பரேஷன் யூனியன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.