விதை சான்றளிப்பு அலுவலக கட்டிட பணிகளை வேளாண்மை இயக்குனர் ஆய்வு

தஞ்சை காட்டுத்தோட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் மூலம் கட்டப்படும் ஒருங்கிணைந்த விதை சான்றளிப்பு அலுவலக வளாக கட்டிட பணிகளை வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கட்டிட பணிகளை ஆய்வு செய்த வேளாண்மை இயக்குனர்
கட்டிட பணிகளை ஆய்வு செய்த வேளாண்மை இயக்குனர்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் மூலம் கட்டப்படும் ஒருங்கிணைந்த விதை சான்றளிப்பு அலுவலக வளாக கட்டிட பணிகளை தமிழக வேளாண்மைத்துறை இயக்குனரும், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனருமான(பொறுப்பு) தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தலைமையிடத்து வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம்பிள்ளை, விதை ஆய்வு துணை இயக்குனர் பெரியகருப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கணேசன், வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய திட்டம்) ஈஸ்வர், விதைப்பரிசோதனை அலுவலர் சிவவீரபாண்டியன், விதைச்சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com