வீட்டு மனை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டு மனை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்:

வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் குழந்தான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். 

 வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் உரிமையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் திட்டப் பணிகளை செயல்படுத்த மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். 

இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் தனசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் தம்பிராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com