குடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் மனைவி தலையை வெட்டிய கணவர் ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவியை கொலை செய்த நரேஷ்பாகெல்
மனைவியை கொலை செய்த நரேஷ்பாகெல்
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கச்புரா பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்பாகெல் (33). டி.வி. மெக்கானிக்.

இவரது மனைவி சாந்தி தேவி. இவர்களுககு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். நரேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். இதை சாந்தி கண்டித்தார்.

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை ஆத்திரம் அடைந்த நரேஷ், அரிவாளால் சாந்தியை வெட்டி தலையை துண்டித்தார்.

முண்டமாக இருந்த மனைவி பிணத்தை ஒரு அறையில் வைத்து பூட்டினார். சாந்தியின் தலையை ஒரு டப்பாவுக்குள் மூடி வைத்து 5 கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றார்.

குடிப்பத்தை கண்டித்ததால் அவர் மனைவியை வெட்டிக் கொன்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “சாந்தியை கொலை செய்த நரேஷ், அவரது உடலை அறையில் வைத்து விட்டு வெளிப்புறமாக பூட்டப்போட்டுள்ளார். தாயை காணாததால் குழந்தைகள் அறை ஜன்னலை திறந்த போது தாய் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு சத்தம் போட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com