சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ

தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ
Published on

சென்னை தியாகராய நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

தீவிபத்தை அடுத்து கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 14 ஊழியர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ மளமளவென பரவி வருவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

7 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் முதல் இரு மாடிகளில் தீ கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நுரைக்கலவை எந்திரம் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com