6 வருடங்களுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது

6 வருடங்களுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
6 வருடங்களுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது
Published on

திருமானூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள க.மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 33). இவருக்கும், திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் (30) என்பவருக்கும் இருந்த முன் விரோத தகராறில், கடந்த 2012-ம் ஆண்டு தீபக்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகானந்தத்தையும், அவரது நண்பர் க.மேட்டுத்தெருவை சேர்ந்த மைனர் மகன் ஸ்டாலின் (23) என்பவரையும் அடித்து கொலை செய்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டனர்.

இதையடுத்து திருமானூர் போலீசார் முருகானந்தம், ஸ்டாலின் உடலை தோண்டியெடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், தீபக்குமார் திருமழபாடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவலையடுத்து, திருமழபாடிக்கு சென்ற திருமானூர் போலீசார் தீபக்குமாரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com