மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோவிந்த்

அடுத்த மாதம் இரண்டாவது வெளிநாட்டு அரசுமுறை சுற்றுப்பணம் செல்ல இருக்கும் ஜனாதிபதி கோவிந்த், மொரீஷியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். #PresidentKovind
மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோவிந்த்
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், அவரது முதல் வெளிநாட்டு பயணமாக அது அமைந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.

அடுத்த மாதம் 12-ம் தேதி மொரீஷியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில், ஜனாதிபதி கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். அதனை அடுத்து, மடாகஸ்கர் நாட்டுக்கும் கோவிந்த் செல்கிறார்.

ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் மற்றும் சில துணை மந்திரிகளும் செல்வார்கள் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #PresidentKovind #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com