ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் - குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காந்தகார் நெடுஞ்சாலையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கனில் குண்டூவெடிப்பு
ஆப்கனில் குண்டூவெடிப்பு
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தற்கொலைப் படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்த குழந்தைகள்  மற்றும் பெண்கள் உள்பட  34 பேர் பலியானார்கள்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர்.

இது தலிபான் பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com