

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஹக்கானி தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குனரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், ஹக்கானி குழுவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், பாகிஸ்தான் சென்று அங்குள்ள கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானை சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான டி20 கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
90 பேர் உயிரை பறித்த காபூல் தாக்குதல்
அதன்படி ஒரு போட்டி காபூல் நகரிலும் மற்றொரு போட்டி பாகிஸ்தான் மண்ணிலும் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரும் நடத்த முடிவு செய்யப்பட்டது.