ஆப்கானிஸ்தான் - ராணுவ தாக்குதலில் 2 தலிபான் தலைவர்கள் உள்பட 52 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 2 தலிபான் தலைவர்கள் உள்பட 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #GhazniMilitantskilled
ஆப்கானிஸ்தான் - ராணுவ தாக்குதலில் 2 தலிபான் தலைவர்கள் உள்பட 52 பயங்கரவாதிகள் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.  பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அபு காலித் மற்றும் குமாண்டன் சர்ஹாதி ஆகிய 2 தலிபான் தலைவர்கள் உள்பட 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. #GhazniMilitantskilled

X

Maalai Malar
www.maalaimalar.com