ஆப்கானிஸ்தானில் ஆறு மாதத்தில் தீவிரவாத தாக்குதல்களால் 1662 பேர் மரணம்: ஐ.நா. சபை அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களால், கடந்த ஆறு மாதகாலத்தில் சுமார் 1,662 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளளது.
ஆப்கானிஸ்தானில் ஆறு மாதத்தில் தீவிரவாத தாக்குதல்களால் 1662 பேர் மரணம்: ஐ.நா. சபை அறிவிப்பு
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்கள் குறிப்பாக தாலிபான்கள் மற்றும் ஐ..எஸ். தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு மாத காலமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1,662 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் 20 சதவிகிதம் பேர் தலைநகரான காபூலில் நடைபெற்ற தாக்குதல்களில் இறந்துள்ளனர். கடந்த மே மாதம் காபூலில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுவே இந்தாண்டு ஆப்கானில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது. 

பெண்கள் மற்றும் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாக நடைபெற்ற தாக்குதல்களில் 174 பெண்களும், 436 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் இறந்தவர்வர்களைவிட அதிகமாகும். 

ஐ.நா. சபையின் தகவல்களின்படி, 2009-ம் ஆண்டு ஜனவரி முதல் நடத்தப்பட்ட திவிரவாத தாக்குதல்களில் 26,500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 49,000 பேர் காயமடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com