ஆப்கானிஸ்தான்: மதரசா மீது ராக்கெட் தாக்குதல்- 20 தலிபான் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஒரு மதரசாவின் மீது இன்று அரசுப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்: மதரசா மீது ராக்கெட் தாக்குதல்- 20 தலிபான் தீவிரவாதிகள் பலி
Published on

காபுல்:

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள் மீது உள்நாட்டு ராணுவம் மற்றும் சில வெளிநாட்டு விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் காபுலில் இருந்து தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வர்டாக் மாகாணத்தில் உள்ள பிரபல மதரசா ஒன்றில் தஞ்சம் அடைந்திருந்த தீவிரவாதிகள் மீது இன்று நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அம்மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் மங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த மதராசாவில் இருந்த பிள்ளைகளை வெளியேற்றிய பின்னர் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com