வடசேரியில் சொகுசு பங்களாவில் விபசாரம்- பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

வடசேரியில் சொகுசு பங்களாவில் வைத்து அழகிகள் மூலம் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்கு  பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் சென்று வந்துள்ளனர்.

தொடர்ந்து இதேப்போல நடந்து வந்ததால் அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த தகவலை அவர்கள் வடசேரி போலீசாருக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வடசேரி போலீசார் அந்த சொகுசு பங்களாவை ரகசியமாக கண் காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலையும் போலீசார் அந்த பகுதியில் நோட்ட மிட்டபடி இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சில வாலிபர்கள் அந்த பங்களாவுக்குள் சென்று வந்தனர். இதனால் அதிரடியாக போலீசார் பங்களாவுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகள் மூலம் விபசாரம் நடப்பது தெரியவந்தது.

அந்த பங்களாவில் 3 சொகு அறைகளும் இருந்தது. மேலும் 3 இளம்பெண்களும் அங்கு இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் விபசார அழகிகள் என்பது தெரியவந்தது. அந்த அழகிகளை பெண் புரோக்கர் ஒருவரும், விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்து உள்ளார். பெண்களிடம் உல்லாசமாக இருந்த அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த ஜம்பு லிங்கம், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெண் புரோக்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கிருந்த 3 விபசார அழகிகளையும் போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com