சேலம் அருகே அதிமுக பெண் நிர்வாகி கொலையில் ஆட்டோ டிரைவர் கைது

சேலம் அருகே அதிமுக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தா (50). பனமரத்துப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி தலைவியாக இருந்தார். பெரமனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று சாந்தா பனமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணி புரியும் தனது மருமகளை அழைத்து வருவதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

சந்தியூர் ஆட்டையாம்பட்டியை அடுத்த காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை திடீரென மர்மநபர் ஒருவர் வழிமறித்தார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்மநபர் சரமாரியாக சாந்தாவை கத்தியால் குத்தி கொன்றார். விசாரணையில் ஆட்டோ டிரைவரான அ.தி.மு.க.வை சேர்ந்த கழுதைபால் என்ற ரமேஷ் (வயது 26) அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com