

பாட்னா:
பீகார் மாநிலத்தில் உள்ள லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரியில் கிருஷ்ண குமார் ராய் என்ற மாணவன் பி.காம். பயின்று வருகிறான். அவருக்கு கொடுக்கப்பட்ட தேர்வு நுழைவுச் சீட்டில் விநாயகர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுழைவுச் சீட்டில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாணவர் கூறுகையில், 'என் நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டேன். என் புகைப்படத்திற்கு பதிலாக விநாயகர் புகைப்படம் இருந்தது. அதை மாற்றுவதற்காக ஒரு மாத காலமாக கல்லூரி அலுவலகத்திற்கு சென்று வந்தேன். அதன் பின்னரே மாற்றம் செய்யப்பட்டது. இல்லையெனில், எனக்கு பதிலாக விநாயகர் வந்து தேர்வு எழுதியிருப்பார்' என கூறினார்.
பீகாரின் பிரபல பல்கலைக்கழகத்தில் இது போன்ற தவறு நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் முகவரியும் தவறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.