தென்காசி அருகே உயரம் குறைந்து கொண்டே வரும் அடிபம்பு- சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி அருகே உள்ள மேலகரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிபம்பின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் இதனை சரிசெய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயரம் குறைந்து கொண்டே வரும் அடிபம்பை படத்தில் காணலாம்.
உயரம் குறைந்து கொண்டே வரும் அடிபம்பை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தென்காசி அருகே உள்ள மேலகரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் பேரூராட்சி சார்பில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் கடந்த சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இந்த அடிபம்பு பழுதடைந்துள்ளது. இதிலிருந்து தண்ணீர் வரவில்லை. எனவே பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது.

இந்த அடிபம்பின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது இதில் ஒரு குடம் வைக்க முடியாது. சிறிய பாத்திரம் மட்டுமே வைக்கும் அளவில் மாறிவிட்டது. இதனை சீர்செய்து இப்பகுதி மக்களுக்கு பயன்தரும் அளவில் மாற்ற வேண்டும் அல்லது இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com