பனிப்புகை மூட்டத்தை சமாளிக்க செயற்கை மழை: யோகி ஆதித்யநாத் யோசனை

லக்னோ உள்ளிட்ட சில நகரங்களில் வியாபித்துள்ள பனிப்புகை மூட்டத்தை சமாளிக்க செயற்கை மழை பெய்விக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பனிப்புகை மூட்டத்தை சமாளிக்க செயற்கை மழை: யோகி ஆதித்யநாத் யோசனை
Published on

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது பனிமூட்டம் காணப்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக புகை மூட்டமும் காணப்படுகிறது. சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மற்றும் புகைமூட்டம் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கடும் குளிரும் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு நெருப்பில் குளிர்காய்கின்றனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ உள்ளிட்ட சில நகரங்களில் பனி மற்றும் புகை மூட்டத்தை அகற்றுவதற்கு செயற்கை மழையை பெய்விக்கலாம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் யோசனை தெரிவித்துள்ளார். அதேசமயம் பொது இடங்களில் தேவையற்ற பொருட்களை எரிக்கவும் தடை விதித்துள்ளார்.

நேற்று இரவு நடந்த சுற்றுச்சூழல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, கான்பூர் ஐஐடி, செயற்கை மழைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com