பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 2ஜி ஊழல் என பா.ஜனதா பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பா.ஜனதா தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு கூறினார்.
பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு
Published on

சென்னை:

2ஜி தீர்ப்பு பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பொய் வழக்கு. இதில் எந்த உண்மையும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 2ஜி ஊழல் என பா.ஜனதா பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பா.ஜனதா தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியின் போது வழக்கு தொடரப்பட்டாலும் ஊழல் என்று சொல்லி பா.ஜனதாதான் ஆட்சிக்கு வந்தது. விடுதலையான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com