திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்
Published on

சென்னை:

சென்னையில் இன்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் இந்த வாரம் வெளியாகும். திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது. தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே விரைவில் தொடங்க உள்ளது.

ஏப்ரல் 20-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும். காலா திரைப்பட வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள்

இவ்வாறு அவர் கூறினார். #Vishal #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com