முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

தான் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் இன்று திடீரென சந்தித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
Published on

சென்னை:

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது. படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com