பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்

இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார். #CeylonManohar #Popsinger #Surangani
பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்
Published on

சென்னை:

இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் (73 வயது) சென்னையில் நேற்று (22.01.2018)  காலமானார்.

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பாப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார்.

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பாடி நடித்திருக்கிறார். #CeylonManohar #Popsinger #Surangani  #AEManoharan #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com