திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

சென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth
திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
Published on

சென்னை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நடிகர், நடிகைகள் பங்கேற்ற  பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில், இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திரைத்துறைக்காக பல தியாகங்களை செய்தவர் இளையராஜா. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உண்டு.

எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு தான் மிக நன்றாக இசை அமைத்திருக்கிறார். முதல் படத்திலிருந்து இப்போது வரை இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தொடர்கிறது என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com