தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை: மலேசியாவில் ரஜினி பேச்சு

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை என மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார். #Malaysia #Rajinikanth
தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை: மலேசியாவில் ரஜினி பேச்சு
Published on

மலேசியா:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.

இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (6-ந்தேதி) இந்த விழா தொடங்கியது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்-கமலஹாசன் உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

கலை நிகழ்ச்சியில் ரஜினி ரஜினிகாந்த் பேசியதாவது:

என்னை வாழவைத்த தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை. நான் சிறுவயதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பட்டோடி. இந்திய வீரரில் தோனியை பிடிக்கும், ஆனால் எப்போதும் எனக்கு பிடித்த வீரர் சச்சின் தெண்டுல்கர்தான்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews #Malaysia #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com