காவல் நிலையத்தில் நடனம் ஆடிய போலீசார் - வைரலாகும் வீடியோ

மேற்கு வங்காளம் மாநிலத்தில் காவல் நிலையத்தினுள் பாலிவுட் பாடலுக்கு போலீசார் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் அசான்புல் மற்றும் துர்காபூர் பகுதிகளுக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் போலீசார் பாலிவுட் பாடலை இசைக்க செய்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா சாதன் மாண்டல் பாடலுக்கு ஏற்றவாறு நடமாடினார். இதனை அங்கிருந்த பெண் காவலாளிகள் கைத்தட்டி ரசித்தனர்.

இதனை செல்போனில் பதிவு செய்த மற்றொரு போலீசார் இணையதளத்தில் பதிவு செய்தார். அது வைரலாக பரவி வருகிறது. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டிய போலீசார் இவ்வாறு ஒழுக்கமின்றி நடந்து கொண்டது குறித்து அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காளம் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் விரைவில் தெரியவரும். அந்த நேரத்தில் வெளியிலிருந்து யாராவது வந்திருந்தார்களா என்பதை கண்டுபிடிக்கும் முனைப்பில் போலீசார் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com