பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது

மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் இன்று புனேவில் கைது செய்தனர். #bhimakoregaonviolence
பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீமா கோரேகானில் தலித் மக்களுக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் ஃபதன்கலே (28), படுகொலை செய்யப்பட்டார். 

இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மேலும், மும்பை முழுவதும் நடைபெற்ற சாலைமறியலால் போக்குவரத்து நெரிசல் மறியல் ஏற்பட்டது. கலவரம் முற்றிதால் மும்பை முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் இன்று புனேவில் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய மிலிந்த் ஏக்போத் என்பவரை தேடி வந்தோம். புனேவின் சிவாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்தவரை இன்று காலை மடக்கி கைது செய்துள்ளோம் என தெரிவித்தனர். #bhimakoregaonviolence #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com