திருமங்கலம் அருகே விபத்து- முதியவர் பரிதாப பலி

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து
விபத்து
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள பச்சகோப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 70). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆலம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென்று ரோட்டை கடக்க முயன்ற கட்ராம்பட்டியை சேர்ந்த குருவம்மாள் (40) மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மணி, குருவம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். குருவம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com