கணவர் விபத்தில் சிக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரை அருகே கணவர் விபத்தில் சிக்கி வேலைக்கு செல்லாமல் இருப்பதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து இறந்தார்.
கணவர் விபத்தில் சிக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

மதுரை:

மதுரை ஒத்தக்கடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சுகம் (32). இவரது கணவர் அன்பரசன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அன்பரசனுக்கு 5 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்து நடந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரால் சரிவர வேலைக்கு போக முடியவில்லை.

இதனால் அஞ்சுகம் குடும்பம் நடத்த வருமான மின்றி தவித்தார்.

இந்த நிலையில் அஞ்சுகம் சம்பவத்தன்று இரவு வீட்டில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதனால் உடல் முழுவதும் வெந்த நிலையில் அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஞ்சுகம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஒத்தக்கடை போலீசில் அஞ்சுகம் தந்தை பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. வெற்றிசெழியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com