காரிமங்கலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகணம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பவன்சாய் (எ) ஹரி. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த பவன்சாய் நேற்று தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்குசென்று தனது தாய் சாந்தியை அழைத்துக்கொண்டு பாலக்கோட்டில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது தும்பலஅள்ளி அருகே செல்லும் போது திடீரென குறுக்கே வந்த மற்றொரு இருசக்கர மோட்டார் சைக்கிள் பவன்சாய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தாய் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த பவன்சாயை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த சாந்தி மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைசெய்து அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com