ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஏசி சண்முகம் கோரிக்கை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா
Published on

சென்னை:

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார் என்னும் பழமொழியை உண்மையாக்கியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப் பேற்றதுடன் மட்டுமின்றி தான், தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை, 6 முறை தமிழக முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்தி நிரூபித்தவர்.

மக்களால் நான்- மக்களுக்காகவே நான் என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர். இவருக்கு மத்திய அரசு “பாரதரத்னா” விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com