உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்- ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார் அபிஷேக் வர்மா

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தார். #ShootingWorldCup #AbhishekVerma #TeamIndia
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்- ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார் அபிஷேக் வர்மா
Published on

பீஜிங்:

சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்  பிஸ்டர் பிரிவில், இந்தியாவின் அபிஷேக் வர்மா 242.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ரஷிய வீரர் ஆர்டம் செர்னோசோவ் 240.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். கொரிய வீரர் சியுங்வூ ஹான் 220 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் வர்மா தனது இடத்தை உறுதி செய்தார். இதேபோல் அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி, திவ்யன்ஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர். #ShootingWorldCup #AbhishekVerma #TeamIndia

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com