உலகக்கோப்பை வில்வித்தை- அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாவிற்கு வெண்கலம்

உலகக்கோப்பை வில்வித்தையில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா வெண்கல பதக்கம் வென்றனர். #WorldCupArchery #AbhishekSharma
உலகக்கோப்பை வில்வித்தை- அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாவிற்கு வெண்கலம்
Published on

ஷாங்காய் நகரில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான அபிஷேக் ஷர்மா, வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் வீராங்கனை ஜோதி சுரேகா ஆகியோர் இணைந்து துருக்கி இணையை எதிர்கொண்டனர்.

இதில் அபிஷேக் ஷர்மா - ஜோடி சுரேகா ஜோடி 154 - 448 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது. முதல் சுற்றில் இந்திய ஜோடி 39-35 என முன்னணி பெற்றது. இந்த முன்னணிதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தவிர இன்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் இந்திய அணிக்கு எமாற்றமே கிடைத்தது.

அபிஷேக் வர்மாவிற்கு இது 2-வது உலகக்கோப்பை பதக்கமாகும், ஒட்டுமொத்தமாக 7-வது பதக்கம் இதுவாகும். ஜோதியின் முதல் மிகப்பெரிய பதக்கம் இதுவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com