அரியானா: சோனிபட் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட துண்டா குற்றவாளி என தீர்ப்பு

அரியானா மாநிலம் சோனிபட்டில் 1996-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தாய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா குற்றவாளி என சோனிபட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியானா: சோனிபட் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட துண்டா குற்றவாளி என தீர்ப்பு
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலம் சோனிபட்டில் 1996-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தாய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா குற்றவாளி என சோனிபட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள திரையரங்க வளாகத்தில் 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக லஷ்கர் இ தாய்பா இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சோனிபட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் கைது செய்யப்பட்ட துண்டா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com