கடத்தப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பிரமுகர் சத்தீஸ்கரில் பிணமாக மீட்பு

மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பிரமுகரான சீனிவாசா ராவ் சத்தீஸ்கரில் இன்று பிணமாக மீட்கப்பட்டார்.
சீனிவாச ராவ்
சீனிவாச ராவ்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள கோத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (45). இவர்  தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்தவர். கடந்த 4 தினங்களுக்கு முன் இவர் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள எர்ரம்பட்டி பகுதியில் சீனிவாச ராவ் இன்று பிணமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அவரது உடலில் குண்டுகள் பாய்ந்திருந்தது. அவரது உடல் அருகே இருசக்கர வாகனமும் கிடந்தது. 

போலீஸ் இன்பார்மராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்ட்கள் கடத்தி கொன்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com