ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஜி.கே.வாசன் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். #GKVasan #Railway
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு ரெயில்வேயில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சி, சுமார் 403 ரெயில் நிலையங்களை சுற்றியுள்ள சுமார் 2,700 ஏக்கர் ரெயில்வே நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து தனியார் மயமாக்கும் முயற்சி, விவேக் தேப்ராய் கமிட்டியின் பெயரால் ரெயில்வே துறையின் கீழ் உள்ள ரெயில் உற்பத்தி பிரிவுகள், ஒர்க் ஷாப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கட்டுமானப்பணிகள் போன்றவற்றை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம் ஆகியவை ஒரு போதும் ஏற்புடையதல்ல.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு ரெயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டு, ரெயில்வே துறையை லாபகரமாக இயக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ரெயில்வே பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி ரெயில்களை பயணிகளின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு பயன்படுத்திட வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

#TamilNews #GKVasan #Railway

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com