எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு: 360 டிகிரி சொல்கிறார்

கிரிக்கெட்டில் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்வேன் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு: 360 டிகிரி சொல்கிறார்
Published on

வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ், நியூசிலாந்து தொடரின்போது மீண்டும் களம் இறங்கினார். ஆனால், டி வில்லியர்ஸால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதில் டி வில்லியர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. இந்த தொடருக்குப்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 லீக் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 என இழந்தது.

இதனால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், தனது எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com