ஆயக்காரன்புலத்தில் பள்ளியின் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு

ஆயக்காரன்புலத்தில் பள்ளியின் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2-ம்சேத்தியில் அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்களும் 64 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முகரம் பண்டிகையையொட்டி பள்ளி விடுமுறை விடப்பட்டது.

இன்று காலை வழக்கம் போல பள்ளியை திறக்க பள்ளி துப்புரவு பணியாளர் கமலா பள்ளிக்கு வந்தபோது நுழைவு வாயிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் 5 வகுப்பறை பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லேப்டாப் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வட்டார கல்வி அதிகாரி தாமோதரனுக்கு தகவல் தெரிவித்து விட்டு வாய்மேடு போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்தானமேரி பள்ளிக்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com