தமிழகத்தில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு

தமிழகத்தில் ஆவின் பால் விலையை தொடர்ந்து, ஆவின் பால் பொருள்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.
ஆவின் பால்
ஆவின் பால்
Published on

சென்னை:

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு 1 லிட்டர் பால் 56 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், ஆவின் பால் விலையை தொடர்ந்து ஒரு சில ஆவின பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு லிட்டர் நெய் ரூ.35 வரையும், பால் பவுடர் 1 கிலோ ரூ.50 வரையும் உயர்ந்துள்ளது. பனீர் கிலோவுக்கு ரூ. 50ம், வெண்ணெய் அரை கிலோ 10 ரூபாயும் உயர்கிறது.

இதேபோல், ஆவின் பால்கோவா கிலோ 20 ரூபாய் உயர்ந்து ரூ.520 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27 ஆக 

நிர்ணயித்துள்ளது.

இந்த விலை உயர்வு 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com