

3-வது போட்டியின்போது இவருக்கு ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டது. இதனால் கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் இருந்து பிஞ்ச் விலகினார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. சிட்னியில் நடக்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் முழுவதும் குணமடையாததால் நாளை போட்டியில் பஞ்கேற்கமாட்டார் என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.