யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மேல்-சபைக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

ரகுராம் ராஜன், அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவதாக தகவல்கள் பரவிய நிலையில் பாராளுமன்ற மேல்-சபை தேர்தலுக்காக 3 வேட்பாளர்களை அறிவித்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.#AamAdmi
யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மேல்-சபைக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி
Published on

புதுடெல்லி:

யூனியன் பிரதேசமான டெல்லி சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப்பெரும்பான்மை உள்ளதால் மூன்று இடங்களிலும் போட்டியின்றி வெற்றிபெரும் நிலையில் உள்ளது.

அக்கட்சி சார்பில் ரகுராம் ராஜன் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவைக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி அருண் ஷோரி என பலரது பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில், அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சஞ்சய் சிங், நாராயன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் 5-ம் தேதி இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று அக்கட்சி கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com