ஆம் ஆத்மி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது - அமித்ஷா தாக்கு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம்சாட்டினார்.
அமித்ஷா
அமித்ஷா
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

டெல்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களை ஏமாற்றுவதைத் தவிர, தனது பதவிக்காலத்தில் எதையும் செய்யவில்லை ஆம் ஆத்மி அரசு.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு டெல்லியில் அமல்படுத்தவில்லை. இதுபோன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு டெல்லி மக்களிடம் நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கெஜ்ரிவால் அரசு செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com