

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் குருதாஸ்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றது.
இந்நிலையில், மாநில ஆம் ஆத்மி தலைவரும் சங்க்ருர் தொகுதி எம்.பி.யுமான பகவந்த் மான் உத்தரவின்படி, குருதாஸ்பூர், பத்தான்கோட் மாவட்டங்களில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அமைப்புகள் கலைக்கப்பட்டதாக அம்மாநில ஆம் ஆத்மி செயலாளர் குல்ஷன் சாப்ரா இன்று தெரிவித்துள்ளார்.
இங்குள்ள அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகளின் பெயர்கள் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.