பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பிரமாண்ட பேரணி

டெல்லி கவர்னர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் வீடு நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். #AAPmarch #PMresidence
பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பிரமாண்ட பேரணி
Published on

புதுடெல்லி: 

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், தலைநக்ர் டெல்லியில் இன்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். 

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஆம் ஆத்மி பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பேரணியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AAPmarch #PMresidence

X

Maalai Malar
www.maalaimalar.com